ஜீவன் — சீதை திருமணம்: தமிழ்நாடு சிவகக்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நவம்பர் 23 காலை , கெட்டிமேளம் முழங்க ஜீவன் குமாரவேல் தொண்டமான், சீதை ஸ்ரீ நாச்சியார் இராமேஸ்வரனின் கழுத்தில் தாலியைக் கட்டினார்.
டி.பி.எஸ். ஜெயராஜ் பகவான் ஸ்ரீசத்ய பாபாவின் 99 வது பிறந்ததினம் 2025 நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகம் பூராவுமுள்ள கோடிக்கணக்கான பாபா பக்தர்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். ஆனால், நவம்பர் 23 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானைப் பொறுத்தவரை, திருமணமாகாத ஆடவர் என்ற அந்தஸ்துக்கு அவர் விடைகொடுத்த தினமாக அமைந்து விட்டது. ஜீவன் அல்லது ஜீவன் தொண்டமான் என்று அறியப்படும் ஜீவன் குமாரவேல் …

