கனடாவில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய ‘ இலங்கையில் அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க ‘ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.
வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் வெளியீட்டு உரையையும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரனும் சட்டத்தரணியும் சமூக, அரசியல் செயற்பாட்டளருமான சுவஸ்திகா அருலிங்கமும் சமகால அரசியல் நிலைவரங்கள் பற்றிய உரைகளையும் நிகழ்த்துவர்.
இந்த நூல் குமரன் புத்தக இல்ல பிரசுரமாக வெளிவருகிறது.