தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி: களத்தில் சுமந்திரன், சிறிதரன், யோகேஸ்வரன்

டி.பி.எஸ். ஜெயராஜ்/ D.B.S.Jeyaraj

(This is a Tamil Translation of the English article headlined “fSumanthiran , Shritharan and Yoheswaran in Triangular Contest to Become Ilankai Thamil Arasuk Latchi (ITAK)President.)

பெடரல் கட்சி (எவ் பி ) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இலங்கைத் தமிழர்களின் முதன்மையான அரசியல் கட்சியாகும்.தமிழரசுக்கட்சி யா னது 1949 டிசம்பர்18 இல் உருவாக்கப்பட்டது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 75வது தினம் அடுத்த வருடம் கொண்டாடப்படவிருக்கிறது .

தமிழர் ஆயுதப் போராட்டம் வருவதற்கு முன்னர் இலங்கைத் தமிழர்களின் முன்னணி அரசியல் கட்சியாக இலங்கைத்தமிழரசுக்கட்சி இருந்தது. பல ஆண்டுகளாககட்சியின் அளவு மற்றும் செல்வாக்கு குறைந்துள்ள போதிலும், ஏனைய இலங்கை தமிழ் தேசியவாதக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அது இன்னும்குழுவில்சிரேஷ் டராக விளங்குகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட ஒரே இலங்கை தமிழ் அரசியல் கட்சி இக்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்கட்சிக்கு தேசியப்பட்டியலில் உள்ள ஒரு ஆசனம் உட்பட பாராளுமன்றத்தில் ஆறு ஆசனங்கள் உள்ளன. இவர்களில் இருவர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்தும் தலா ஒருவர் வன்னி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திகாமடுல்ல/அம்பாறை தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே, வடக்குகிழக்கின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள தமிழர்களைஇலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணமுடிகிறது.

1949 இல் அதன் தொடக்கத்தில் இருந்து பல ஏற்ற தாழ்வுகளுடன் பரபரப்பானதும் சுவாரஷ்யமானதுமான வரலாற்றைக் கொண்டுள்ளது.புத்தாயிரமாமா ண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) எனப்படும் முதன்மையான இலங்கைத் தமிழ் அரசியல் அமைப்பில் கட்சியானதுமுதன்மையான அடையாளமாக மாறியது. 2004 ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றம், மாகாணம் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில்தமிழரசுக்கட்சியின் சின்னமான ”வீடு’ என்ற பெயரில்இந்த அமைப்பு போட்டியிட்டது.

இந்த வருடத் தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளில் இரண்டு, அதாவது தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ) ஆகிய கட்சிகள் வெளியேறி, மற்ற மூன்று கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – டிரிஎன் ஏ எனக் கட்டமைக்கப்பட்டது.. டெலோ (3) மற்றும் புளொட் (1) ஆகிய கட்சிகளுக்கு நான்கு எம்.பி.க்கள் இருப்பதால்பாராளு மன்றத்தில்தமிழ் தேசியக்கூட்டமைப்பு பத்தில் இருந்து ஆறு எம்.பி.க்களாக குறைந்துள்ளது, அவர்கள் அனைவரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள். இதனால் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சியாகதமிழரசுக்கட்சியே தொடர்ந்தும் பாராளு ளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தற்போது தமிழரசுக்கட்சியானது உட்கட்சி நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியின்
நீண்டகாலமாக தாமதமாகியுள்ள அக்கட்சியின் மாநாட் டை அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில்நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ”மாவை’ என அழைக்கப்படும்
தமிழரசுக்கட்சியின்தற்போதைய தலைவர் சோமசுந்தரம் சேனாதிராஜா தனது பதவியைகைவிடும் தருவாயில் இருப்பதால், ஒரு முக்கியமான தலைமை மாற்றம் போட்டியில் உள்ளது. ”மாவை’ 2014 முதல்தமிழரசுக்கட்சியின் தலைவராக உள்ளார். எனவே, திருகோணமலையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநாட்டில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு மூன்று போட்டியாளர்கள் களமிறங்குவது ஒரு கட்சிஎன்ற கண்ணோட்டத்தில் சிக்கலாகத் தோன்றுகிறது. மதியாபரணன் ஆ பிரகாம் சுமந்திரன், சிவஞானம் சிறி தரன் மற்றும் சீனித்தம்பி யோகே ஸ்வரன் ஆகிய மூவர் கட்சி தலைமைப் பதவிக்கு விரும்புபவர்கள். சுமந்திரன் மற்றும்
சிறிதரன் இருவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் என்பது அனைவரும் அறிந்ததே.

2023 30 நவம்பர் 30 இல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தபோது, சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகிய இரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், மூன்றாவது நியமனம் இரண்டு நாட்களுக்குப் பிறகு தமிழரசுக்கட்சியால் பெறப்பட்டது. இது யோகேஸ்வரன் சார்பாக மட்டக்களப்பில் இருந்து அனுப்பப்பட்டது. இதனால் இரு யாழ்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டிக்குப் பதிலாகமும்முனைப் போட்டியாக மாறியது

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கட்சி தேர்தல் வரவேற்கத்தக்க அம்சமாகும். இருப்பினும்,தமிழரசுக்கட்சி அதன் தொடக்கத்திலிருந்தே அதன் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கட்சி க்குள் வாக்கெடுப்பை மேற்கொண்ட தில்லை. நேரடிப் போட்டியைத் தவிர்க்கும் நடைமுறையை அது ஏற்றுக்கொண்டது மற்றும் அதற்குப் பதிலாக ஏக மனதாக தலைவரைத் தெரிவுசெய்வதை தேர்ந்தெடுத்திருந்தது . 1949 இல் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே, தமிழரசுக்கட்சி கருத்தொருமைப்பாட் டுடன்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பின்பற்றி வந்துள்ளது

”தந்தை செல்வா’

”தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல் வநாயகம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இணை ஸ்தாபகர் மற்றும் முதல் தலைவர் ஆவார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவரது கட்சியினரால் ”ஈழத்து காந்தி’ என்று போற்றப்பட்டார். அவர் விரும்பியிருந்தால் அவரது வாழ்நாளில் கட்சியின் தலைவராக இருந்திருக்கலாம். இருப்பினும் செல்வா தனது முதல் பதவிக் காலத்தின் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இருந்தபோதிலும் செல்வா தலைவராக இருந்தபோது, வன்னியசிங்கம், நாகநாதன், ராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற அவரது பிரதிநிதிகள் சுழற்சி முறையில் கட்சித் தலைவர்களாக பதவி வகித்தனர். செல்வாவின் ஆசீர்வாதத்துடன்முன்கூட்டியே கருத்தொருமைப்பாட்டின்அடிப்படையில் செயற் படுவதால் தேர்தல் எதுவும் நடக்கவில்லை.

1973 ஆம் ஆண்டு அன்றைய வட்டுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா ராஜதுரை ஆகியோர் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவருடன் ஒருவர் போட்டியிட்ட நிலையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருந்தது. இந்த மோதல் கட்சியில் விரிசல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது. செல்வநாயகம் தலையிட்டு ராஜதுரையை போட்டியில் இருந்து விலகச் செய்தார்.

தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி வாக்கெடுப்புக்கு அக்கட்சி இப்போது செல்கிறது. வடக்கில்தற்போதுபதவியில் இருந்துவரும் இரண்டு எம்.பி.க்களும், கிழக்கிலிருந்து ஒரு முன்னாள் எம்.பி.யும் களமிறங்குவது முத்தரப்புப் போட்டியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் 2010 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களாகஇந்த மூன்று பேரும் இணைந்து பாராளுமன்றத்தில் நுழைந்தனர். மூவருமே ஒரு பொதுவான வயதெல்லையை சேர்ந்தவர்கள்.

போட்டியிடும் மூவர்

போட்டியிடும் மூவரில் மூத்தவரான எம்.ஏ.சுமந்திரன் 1964 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி ஆவார். 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக தேசியப் பட்டியல்மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு தேர்தல்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

மூவரில் அடுத்தவர் எஸ். ஸ்ரீதரன் 1968 இல் பிறந்தவர். அவர் முன்னாள் ஆசிரியர் மற்றும்பாடசாலை அதிபர் . ஸ்ரீதரன் 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூவரில் இளையவர் 1970 இல் பிறந்த எஸ்.யோகேஸ்வரன். யோகேஸ்வரனின் தொழில் சமூக சேவையாகும். யோகேஸ்வரன் 2010 மற்றும் 2015 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் 2020 தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் தெரிவு செய்யப்படவில்லை.

ஒரு கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு இலங்கைத்தமிழரசுக்கட்சிக்குள் நியமன நடைமுறையானது, மத்திய செயற்குழுவில் குறைந்தபட்சம் ஆறு உறுப்பினர்கள் எதிர்கால கால வேட்பாளரின் ஒப்புதலுடன் ஒரு பெயரை முன்மொழிய வேண்டும். ஒரே ஒரு வேட்பாளர் இருந்தால், தேர்தல் இருக்காது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், போட்டி இருக்கும்.

275 ”தேர்தல்’ வாக்காளர்கள்

ஒரு தேர்தல் நடந்தால்,தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களே வாக்களிக்க தகுதியுடையவர்களாகும் . மத்திய செயற்குழு 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ”பொது சபை’ அல்லது பொதுக்குழு 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதனால் 275 பேர் கொண்ட வாக்காளர்கள் புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதன்பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர் கட்சி மாநாட்டில் ஏக மனதாக அங்கீகரிக்கப்படுவார்.
மத்திய குழுவில் மாவட்ட அளவில் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் விசேட நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த கட்சி தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் உள்ளனர். பொதுக்குழுவில் கட்சியின் வலயக் கிளைகளை (கோட்டம்) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இருப்பர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்தும், கொழும்பிலிருந்தும் 45 வலயக் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து பிரதிநிதிகள் இருப்பார்கள். பொதுக்குழுவில் 225 உறுப்பினர்கள் இருப்பர்.

வேட்பு மனு

2023 நவம்பர் 30, அன்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தபோது, சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகிய இரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும், நவம்பர் 30 ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்பட்ட மூன்றாவது நியமனம் இரண்டு நாட்களுக்குப் பிறகுதமிழரசிக செயலாளரான டாக்டர். பி. சத்தியலிங்கத்தால் பெற்றுக்கொள்ளப் பட்டது. இது யோகேஸ்வரன் சார்பாக மட்டக்களப்பில் இருந்து அனுப்பப்பட்டது. இதனால் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டிக்குப் பதிலாக மும்முனைப் போட்டியாக மாறியது.

குறைந்தபட்சம் ஆறு மத்திய குழு உறுப்பினர்கள் ஒரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்றாலும், சுமந்திரனின் வேட்புமனுவை டஜன் பேர் ஆதரித்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் இதில் அடங்குவர். சுமந்திரனின் பெயரை முன்மொழிந்தவர்களில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஐ.தே.க நிர்வாக செயலாளர் சேவியர் குலநாயகம் மற்றும் தமிழரசுகட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் வடமாகாண சபையின் முன்னாள் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் அடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனைப் பொறுத்தமட்டிஅவரின் அரசியல் கோட்டை கிளிநொச்சி மாவட்டமாகும். கிளிநொச்சி தனியான நிர்வாக மாவட்டமாக இருந்தாலும், அது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த தேர்தல்களில் கிளிநொச்சியில் இருந்தே சிறி தரன்அதிக விருப்பு வாக்குகலாய் பெற்றிருந்தார். அந்தவகையில் அவர் முன்னாள் வடமாகாண அமைச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் வேள மாலிஹிதன் உட்பட கிளிநொச்சியிலிருந்து 6 பேரால் பரிந்துரைக்கப்பட்டார்.

சீனித்தம்பி யோகேஸ்வரனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஆறு பேரால் பரிந்துரைக்கப்பட்டார். இதில் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனும் ஒருவர். யோகேஸ்வரனின் வேட்புமனு உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சாத்தியமான போட்டியாளர்கள் என்ற ஊகங்கள் எப்பொழுதும் இருந்தபோதிலும், யோகேஸ்வரனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இப்போதும் கூட, முக்கியமான தினத்துக்கு முன்னதாக யோகேஸ்வரன் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளுமாறு யோகேஸ்வரன் வற்புறுத்தப்படக்கூடுமென என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருவர் போராட்டம்

இந்தச் சூழ்நிலையில், யோகேஸ்வரன் வெளியேறாவிட்டாலும்,தமிழரசுக்கட்சி தலைமைக் கான தேர்தல் சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் இடையிலான ”இருவர் போராட்டமாக’ மாறும் என்று தோன்றுகிறது. தமிழரசுக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை சந்திப்பதன் மூலம் இருவரும்பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், இரு போட்டியாளர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் சமூக ஊடகங்களில் தங்களுக்குப் பிடித்தவர்களின் தகுதிகள் மற்றும் நற்பண்புகளைப் பிரசாரம் செய்கிறார்கள். உத்தியோகபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற பிரசாரங்கள் தாழ்ந்த மட்டத்திற்கு இறங்கவில்லை. குறைந்தபட்சம் இன்னும் இல்லை. ஆனால் 2024 பிறந்தபின் பிரசாரங்கள் வேகமெடுக்கத் தொடங்கும் என்பதால் சாத்தியப்பாடு களை நிராகரிக்க முடியாது.

தமிழரசுக்கட்சியின் பழைய காலத்தவர்கள் ,முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் அரசியல் க ட்சியில் அக்கறையுள்ள பார்வையாளர்கள் தலைமைத்துவப் போட்டிக்கான மோசமான நிலைமை ஏற்படும் சந்தர்ப்பம் குறித்து .கவலைப்படுகின்றனர் இப்படியான சண்டை, கட்சியின் கட்டமைப்பைக் குலைத்து கடுமையான விரிசலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

தோல்வியடைந்தவர் தேர்தலுக்குப் பிறகு வெற்றியாளருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பார் என்று கூறினாலும், கசப்பான,போட்டிக்குப் பிறகு ஒருவர் மற்றவருடன் இணைந்து பணியாற்ற முடியாது. அந்தந்த ஆதரவாளர்களே சாதகமாக இல்லாமல் இருக்கலாம். அதுமட்டுமின்றி, நாட்டின் தமிழ் அரசியலின் வரலாறு, கருத்தியல் வேறுபாடுகளாகக் காட்டிக் கொள்ளும் தன்னகங்கார மோதல்களின் தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இது தமிழ் போராளிகளுக்கும் பொருந்தும்.

இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் முக்கிய அம்சம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஒரு அரசியல் கட்சி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுவது தொடர் நிகழ்வாகும். இது சம்பந்தப்பட்ட கட்சிக்கு குறிப்பாக தமிழரசுக்கட்சி கடந்த காலங்களில் அரசாங்கங்களை உருவாக்க மற்றும்/அல்லது உருவாக்காமல் இருக்க உதவியது. அண்மைக் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அரசியல் கட்டமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிகளுடனும் அரசாங்கங்களுடனும் ஈடுபட முடிந்தது.

துண்டாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைய முறிவு மற்றும் தமிழ் அரசியலின் அதிகரித்துவரும் பிளவுபடுத்தல்ஆகியவை அடுத்த பாராளுமன்றத்தில் எந்தவொரு தமிழ் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடியாது என்பதையே உணர்த்துகிறது. ஒப்பீட்டளவில் குரல் கொடுப்பதில் தமிழரசுக்கட்சி மிகவும் மோசமாக இருக்கும், ஒருபுறம் தமிழ் முரண்பாட்டு அரசியல் சிந்தனையையும் மறுபுறம் தமிழ் இணக்கப்பாட்டு அரசியல் சிந்தனையை யும் இழக்க நேரிடும்.

சுமந்திரன்சிறி தரன் தலைமைத்துவ மோதலின் விளைவாக இலங்கைதமிழரசுக்கட்சி உடைந்தால், இரு பிரிவினருக்கும் விளைவுகள் கடுமையாக இருக்கும். ஒரு சமரசத்திற்கு வரும் போட்டியாளர்களால் தேர்தல் நிராகரிக்கப்பட்டால், சாத்தியமான பிளவின் பேரழிவை சிறந்த முறையில் தவிர்க்கலாம் அல்லது பிற்போடப்படலாம்.

வெளிப்புற தலையீடு

இலங்கைத்தமிழரசுக் கட்சி தலைமைத் தேர்தல் நடைபெறும் போது மற்றொரு சாத்தியமான ஆபத்து வெளிப்புறத் தலையீடு ஆகும். வெளிப்புற முகவர்கள் மற்றும்செயற்பாட் டாளர்கள் அதிகளவுக்கு முடிவைப் பாதிக்க முயற்சி செய்யலாம். மூன்று சாத்தியங்கள் உள்ளன. புலம்பெயர் தமிழர்களின் கூறு கள் , இந்தியாவில் இருந்து கூறுகள் மற்றும் ஆழமான இலங்கைஅரசின் கூறுகள் என்றுமூன்று சாத்தியங்கள் உள்ளன இந்த தருணத்தில் இந்த அம்சங்களைப் பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை, ஆனால் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அவ்வாறு செய்வேன்.

ஏற்கனவே கூறியது போல் தேர்தல் பிரசாரம் இப்போதுதான் துவங்கி இன்னும் சூடு பிடிக்கவில்லை.தமிழரசுக்கட்சி தலைமைத்துவப்போட்டி பற்றிய நுண்ணறிவைப் பெற வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்களுடன் நான் உரையாடினேன். இந்த ஊடகவியலாளர் வட்டாரங்களின்பிரகாரம் , சுமந்திரன் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரசாரம் தீவிரமடையும் போது நிலைமை மாறலாம்.

எனவே நல்ல எண்ணம் கொண்டதமிழரசு க்கட்சி பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இப்போதே தலையிட்டு வருவது விவேகமானது மற்றும் எளிதானது.

இணக்கப்பாடு பற்றி சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், குருகுலராஜா போன்ற தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணி, கே.கனகஈஸ்வரன், கல்விமான் நிர்மலா சந்திரஹாசன் போன்ற ”வெளிப்புற’ நலன் விரும்பிகள் மற்றும் சில செல்வாக்கு மிக்க பத்திரிகை ஆசிரியர்களை சாதகமாக செயற் படக்கூடியவர்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மற்றும் இது சம்பந்தமாக ஆக்கபூர்வமாக. அவர்கள் முன்முயற்சி எடுப்பார்கள் என்றும், போட்டியாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தமிழரசுக்கட்சி மற்றும் நீண்டகாலமாக அவதிப்படும் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற் படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

பிளவுபட்டால் எமக்கு வீழ்ச்சி

சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் இடையில் ஒரு சமரசம் சாத்தியமற்றது என்று நினைக்கும் ஆட்கள் உள்ளனர். அவர்கள் சரியாக இருக்கலாம். ஆனால் சமரச முயற்சியால் எதுவும் இழக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, 2020பாரா ளுமன்றத் தேர்தலில் சுமந்திரனும் சிறி தரனும் ஒரு அணியாகச் செயற் பட்டு கூட்டுப் பிரசாரத்தை மேற்கொண்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் அவர்கள் இருவர் மட்டுமே யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றதமிழரசுக்கட்சி வேட்பாளர்கள். ”ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு, பிளவுபட்டால் அனைவருக்கும் தாழ்வு’ என்ற பழமொழியை சுமந்திரன் சிறிதரன்ஆகிய இருவரும் மறந்துவிடக் கூடாது.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டெய்லி மிரர்

தமிழ் வடிவம்: தினக்குரல்

நன்றி: தினக்குரல்