விஜயின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனைவி சங்கீதா விவாகரத்து கோரும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனியாக தேர்தலுக்கு முகங்கொடுக்கிறது
டி.பி.எஸ். ஜெயராஜ் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. சட்டசபையின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு 2026 ஏப்ரில் 23 ஆம் திகதியும் வாக்கு எண்ணாக்கை மே 4 ஆம் திகதியும் இடம் பெறவிருக்கின்றன. தமிழ்நாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி. அவர்களில் ஆண்கள் 2.77 கோடி, பெண்கள் 2.89 கோடி, மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த 7,617 வாக்காளர்களும் இருக்கிறார்கள். இந்தியா எமது நெருங்கிய அயல்நாடு. இந்தியாவின் மாநிலங்களில் 7கோடி 20 …

