எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ‘ காந்தியவாத’ தமிழ் அரசியல் தலைவர்
டி. பி.எஸ். ஜெயராஜ் ” சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்…. மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது.” — எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார். அந்த அனுதாபப் பிரேரணை …